பணி நிறைவு பாராட்டு விழா

சின்னமனூர்: சின்னமனூர் கிருஷ்ணய்யர் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் முனிராஜா.

இவரது பணி நிறைவு பாராட்டு விழாவிற்கு சின்னமனுார் நகராட்சி தலைவர் அய்யம்மாள் தலைமை வகித்தார்.

பள்ளி நிர்வாக குழு தலைவர் சிவமணி முன்னிலை வகித்தார். பள்ளி நிர்வாக குழு செயலர் மாரிமுத்து, நிர்வாக குழு உறுப்பினர்கள் பாஸ்கரன், பாண்டியன், ஜெயச்சந்திரன், ஜோதிக்குமார், மறவர் சங்க பொருளாளர் சிவா, தி.மு.க. மாவட்ட அவைத் தலைவர் மனோகரன், இந்து முன்னனி மாவட்ட தலைவர் சுந்தர், ஆசிரிய பயிற்றுநர் சகாயராஜ், முன்னாள் மாணவர்கள் கொடியரசன் , சுந்தரமூர்த்தி, இளங்கோவன் உள்ளிட்ட பலர் பாராட்டி பேசினார்கள்.

தலைமையாசிரியை சடையம்மாள் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.

Advertisement