கம்பம், சின்னமனுார் மெயின் பஜார்களில் பட்டாசு வெடிக்க தடை விதிக்க வலியுறுத்தல்

கம்பம்: கம்பம், சின்னமனுார் மெயின் பஜாரில் பட்டாசுகள் வெடிக்க தடை விதிக்க வேண்டும் என்று வர்த்தகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த இரு நகரங்களில் மெயின் பஜார் குறைந்தது ஒரு கி.மீ. தூரத்திற்கு உள்ளது. நூற்றுக்கணக்கான கடைகளும், ஒட்டல்களும், வர்த்தக நிறுவனங்களும் உள்ளன. தினமும் கோயில், அரசியல் கட்சிகள், இறப்பு ஊர்வலம் என ஏதாவது ஒரு நிகழ்ச்சிக்கான ஊர்வலம் பஜார் பகுதியில் நடைபெறுகிறது.

பட்டாசுகளை அதிகம் வெடிப்பதும், இறுதி ஊர்வலத்தில் பூக்களை வீசுவதும் வாடிக்கையாக உள்ளது. இதனால் கடைகளில் வியாபாரம் பாதிக்கும் நிலை உள்ளது. பல சமயங்களில் பட்டாசுகள் தெறித்து கடைகளுக்குள் விழுந்து தீப்பற்றுகிறது. போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் நடமாட முடியாத நிலை எழுந்து வருகிறது.

கம்பம், சின்னமனூர் நகர மெயின் ரோட்டில் பட்டாசு வெடிப்பதை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வர்த்தகர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement