மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி 94.43 சதவீதம்

தேனி: தேனி மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்களில் 94.43 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இவர்களில் மாணவர்களை விட மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் அதிகம். கடந்தாண்டு 19வது இடம் பிடித்த தேனி இந்தாண்டு 24ம் இடம் பெற்று பின் தங்கியுள்ளது.
மாவட்டத்தில் பிளஸ் 2 அரசு, அரசு உதவி பெறும், தனியார் என 141 பள்ளிகளைச் சேர்ந்த 6171 மாணவர்கள், 6707 மாணவிகள் என மொத்தம் 12,878 பேர் எழுதினர். தேர்வுகள் மார்ச் 3 முதல் மார்ச் 25 வரை நடந்தது. நேற்று தேர்வு முடிவுகள் வெளியாகின. முடிவுகள் இணைதளம் மூலம், மாணவர்களின் பெற்றோர்களின் அலைபேசி எண்களுக்கு குறுஞ்செய்தியாகவும் அனுப்பப்பட்டன.
மாவட்டத்தில் 5712 மாணவர்கள், 6449 மாணவிகள் என மொத்தம் 12,161 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 94.43 சதவீதம் ஆகும். மாநில அளவில் தேனி மாவட்டம் 24ம் இடத்தை பிடித்துள்ளது. கடந்த ஆண்டு தேனி மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்ச்சி சதவீதம் 94.65 சதவீதத்துடன் 19வது இடம் பிடித்திருந்தது. நர்சிங் ஜெனரல், புள்ளியியல், வணிக கணிதம் மற்றும் புள்ளியியல் பாடபிரிவுகளில் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சியடைந்துள்ளனர். தமிழ், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், கணினி அறிவியல், கணிதம், அரசியல் அறிவியல், வணிகவியல், கம்யூட்டர் அப்ளிகேஷன் ஆகிய பாடப்பிரிவுகளில் 99 சதவீதத்திற்கு மேல் தேர்ச்சியடைந்துள்ளனர். உயிரியியல், பொருளியல் பாடங்களில் 98 சதவீத்திற்கு மேலும், ஆங்கிலம், புவியியல், வரலாறு, கணக்கு பதிவியல் பாடங்களில் 97 சதவீத மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். சிறப்பு தமிழ் பாடப் பிரிவில் மட்டும் 94.74 சதவீத மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
47 பள்ளிகளில் 100 சதவீதம்: கடந்தாண்டு 5 அரசு மேல்நிலைப்பள்ளிகள் உட்பட 44 பள்ளிகளில் 100 சதவீத மாணவர்கள் தேர்ச்சி அடைந்தனர். இந்தாண்டு 12 அரசுப்பள்ளிகள் உட்பட 47 பள்ளிகளில் 100 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
தேர்ச்சி விகிதம் குறைந்தது பற்றி சி.இ.ஓ., இந்திராணி கூறுகையில், 'கடந்தாண்டை விட 0.12 சதவீதம் குறைந்துள்ளது. அடுத்த ஆண்டு தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும்.
படிப்பில் கவனம் குறைந்த மாணவர்களுக்கு கூடுதல் பயிற்சி அளிக்கப்படும். பள்ளிக்கு வராத சில மாணவர்களை பள்ளிக்கு வரவழைத்து பயிற்சிகள் வழங்கப்படும்,' என்றார்.
மேலும்
-
தோல்வியில் முடிந்தது பாக்., தாக்குதல்; ஜம்மு செல்கிறார் உமர் அப்துல்லா
-
குளத்தை மீட்ட இளைஞருக்கு கிராம மக்கள், எம்.பி., பாராட்டு
-
போதை மருந்து புழக்கம் கண்காணிக்க 41 பறக்கும் படை அமைக்க கருத்துரு
-
450 உலக பல்கலைகளுடன் ஐ.ஐ.எம்., காஷிபூர் கைகோர்ப்பு
-
கண்ணகி கோவில் விழா பக்தர்களுக்கு வசதி செய்யப்பட்டுள்ளதா? உயர் நீதிமன்றம் கேள்வி
-
3 மணி நேரத்திற்கு முன்பே விமான நிலையம் வாருங்கள்; பயணிகளுக்கு உத்தரவு