இந்தியா உங்களுடன் நிற்கிறது; இந்திய ராணுவத்திற்கு விளையாட்டு வீரர்கள் ஆதரவு

புதுடில்லி: "அமைதியை தேர்ந்தெடுக்க வாய்ப்பு இருந்தபோதும், பாகிஸ்தான் போரை தேர்வு செய்துள்ளது. இந்திய ராணுவம் கொடுத்த பதிலடியை பாகிஸ்தானால் ஒருபோதும் மறக்க முடியாது," என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் விரேந்தர் ஷேவாக் தெரிவித்துள்ளார்.
இந்தியா - பாகிஸ்தான் இடையே கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து, இந்திய ராணுவத்தினர் பாகிஸ்தானை நிலைகுலையச் செய்யும் வகையில் தாக்குதலை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், இந்தியா - பாகிஸ்தான் தாக்குதல் குறித்து இந்திய விளையாட்டு வீரர்கள் கருத்துக்களை கூறி வருகின்றனர்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் விரேந்தர் ஷேவாக் கூறியதாவது; அமைதியை தேர்ந்தெடுக்க வாய்ப்பு இருந்தபோதும், போரை தேர்வு செய்துள்ளது பாகிஸ்தான். பயங்கரவாதிகளை காப்பாற்ற பாகிஸ்தான் அடுத்தக்கட்ட நகர்வை மேற்கொள்கிறது. நமது இந்திய படைகள் சரியான முறையில் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். இதனை பாகிஸ்தான் ஒருபோதும் மறக்காது, எனக் குறிப்பிட்டிருந்தார்.
ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா; நமது நாட்டிற்கு எதிரான பயங்கரவாதத்தை எதிர்த்து போரிடம் தைரியமிக்க இந்தியப் பாதுகாப்பு படையினரை பார்க்கும் போது பெருமையாக இருக்கிறது. இந்த நேரத்தில் உரிய வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, நமது பாதுகாப்பை உறுதி செய்து கொள்வோம், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து; இந்திய ஆயுதப் படையில் உள்ள வீரர்கள், வீராங்கனைகளின் தைரியம் மற்றும் தியாகம் நமது தேசத்தின் ஆன்மா. ஆபரேஷன் சிந்தூர் போன்ற தருணங்களில், நமது மூவர்ணக் கொடியை உயரப் பறக்க வைக்கும் அமைதியான வலிமை மற்றும் தன்னலமற்ற சேவையை நாங்கள் நினைவுபடுத்துகிறோம். இந்தியா உங்களுடன் நிற்கிறது. ஜெய் ஹிந்த், என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்
மேலும்
-
எல்லையில் மீண்டும் பாக்., அத்துமீறல்: இந்தியா பதிலடி
-
பாகிஸ்தான் தனது செயல்களுக்காக மன்னிப்பு கேட்கணும்; பிரசாந்த் கிஷோர் காட்டம்
-
ஆதாரங்களை கொடுத்தாலும் பயங்கரவாத தொடர்பை மறுக்கும் பாக்.,: இந்திய தூதர்
-
முப்படை தளபதிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை
-
பொய்த்தகவல் பரப்பி உலகத்தை ஏமாற்றும் பாகிஸ்தான்!
-
எல்லையோர மாநிலங்களில் பலத்த பாதுகாப்பு; குஜராத்தில் பட்டாசு, டிரோன்களுக்கு தடை!