பெட்ரோல், எல்.பி.ஜி., தட்டுப்பாடு இல்லை: இந்தியன் ஆயில் நிறுவனம் திட்டவட்டம்

புதுடில்லி: பெட்ரோல், டீசல் மற்றும் எல்.பி.ஜி., எந்த தட்டுப்பாடும் இன்றி விநியோகம் செய்யப்படுகிறது என இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்களை ஆபரேஷன் சிந்தூர் என்று பெயரில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தானும் எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்த முயற்சி செய்து வருகிறது. இதனால் இந்தியா- பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவுகிறது.
இந்நிலையில், பெட்ரோல், டீசல் மற்றும் எல்.பி.ஜி., எந்த தட்டுப்பாடு இல்லை என இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து இந்தியன் ஆயில் நிறுவனம் கூறியிருப்பதாவது: எல்லா மையங்களிலும் எரிபொருள் கிடைக்கும். நாடு முழுவதும் எரிபொருள் கையிருப்பு உள்ளது. மக்கள் அச்சப்பட வேண்டாம்.
பெட்ரோல், டீசல் மற்றும் எல்.பி.ஜி., எந்த தட்டுப்பாடும் இன்றி விநியோகம் செய்யப்படுகிறது. போதுமான அளவு இருப்பு உள்ளது. சீரான விநியோகம் நடைபெறுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வாசகர் கருத்து (1)
Nada Rajan - TIRUNELVELI,இந்தியா
09 மே,2025 - 18:09 Report Abuse

0
0
Reply
மேலும்
-
இலங்கையில் ஹெலிகாப்டர் விபத்து 6 பேர் பலி
-
போர் பதற்றம் எதிரொலி: டில்லி எய்ம்ஸ் மருத்துவமனை ஊழியர் விடுமுறை ரத்து
-
காஷ்மீரில் 2வது நாளாக டிரோனை ஏவிய பாக்.,: தாக்கி அழித்தது இந்தியா
-
வங்கிச் சேவையில் இடையூறு கூடாது: நிர்மலா சீதாராமன் உத்தரவு
-
எல்லையில் மீண்டும் பாக்., அத்துமீறல்: இந்தியா பதிலடி
-
பாகிஸ்தான் தனது செயல்களுக்காக மன்னிப்பு கேட்கணும்; பிரசாந்த் கிஷோர் காட்டம்
Advertisement
Advertisement