பதட்டத்தை தணிக்க தயாராக இருக்கிறோம்; சீனா அறிவிப்பு

37


பீஜிங்: ''இந்தியா, பாகிஸ்தான் இடையே பதட்டத்தை தணிக்க தயாராக இருக்கிறோம். அனைத்து வகையான பயங்கரவாதத்தையும் எதிர்க்கிறோம்'' என சீனா தெரிவித்துள்ளது.


இந்தியா-பாகிஸ்தான் பதற்றம் குறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் லின் ஜியான் கூறியதாவது: இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான தற்போதைய நிலைமை குறித்து சீனாவின் நிலைப்பாட்டை நேற்று நாங்கள் பகிர்ந்து கொண்டோம்.



இந்தியா, பாகிஸ்தான் இடையே பதட்டத்தை தணிக்க தயாராக இருக்கிறோம். நிலைமையை மேலும் சிக்கலாக்கும் நடவடிக்கைகளை எடுப்பதை இருநாடுகளும் தவிர்க்க வேண்டும். தற்போதைய நிலைமை குறித்து சீனா கவலை கொண்டுள்ளது. இந்தியாவும் பாகிஸ்தானும் எப்போதும் ஒருவருக்கொருவர் அண்டை நாடுகளாகவே இருக்க வேண்டும்.


அவர்கள் இருவரும் சீனாவின் அண்டை நாடுகள் ஆகும். சீனா அனைத்து வகையான பயங்கரவாதத்தையும் எதிர்க்கிறது. அமைதியை கடைபிடிக்க வேண்டும். சர்வதேச சட்டத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். தற்போதைய பதட்டங்களைத் தணிப்பதில் மற்ற நாடுகளுடன் இணைந்து பணியாற்ற நாங்கள் தயாராக இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement