நாய்கள் கடித்து 6 ஆடு பலி

காங்கயம்: காங்கயம், வீரணம்பாளையம், சூலக்கல் புதுாரை சேர்ந்த சிதம்பரம், 50; விவசாயி. தோட்டத்தில், 40க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார்.

நேற்று முன்தினம் மாலை வழக்கம் மேய்ச்சலுக்கு பின், ஆடுகளை பாட்டியில் அடைத்து விட்டு, வீட்டுக்கு சென்றார். நேற்று காலை வழக்கம் போல் சென்று பார்க்கும் போது, பட்டியில் இருந்த, எட்டு செம்மறி ஆடுகளை நாய்கள் கடித்தது தெரிந்தது. ஆறு ஆடுகள் இறந்தும், இரண்டு ஆடுகள் காயமடைந்தும் இருந்தன. காங்கயம் பகுதியில், தினந்தோறும் தெருநாய்கள் கால் நடைகளை வேட்டையாடி வருவது தொடர் கதையாக உள்ளது. தெருநாய்களை கட்டுப்படுத்த உள்ளாட்சி நிர்வாகம், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Advertisement