எல்லையோர மாநிலங்களில் பலத்த பாதுகாப்பு; குஜராத்தில் பட்டாசு, டிரோன்களுக்கு தடை!

ஆமதாபாத்: எல்லையோர மாநிலங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. எல்லையில் நிலவும் பதட்டம் காரணமாக குஜராத்தில் பட்டாசு, டிரோன்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதட்டம் நிலவி வருகிறது. இதனால் பாகிஸ்தான் எல்லையில் உள்ள மாநிலங்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. குஜராத்தின் கட்ச் மாவட்டத் தலைநகரான புஜ் நகரிலும் பாகிஸ்தான் தாக்குதல் நடத்த முயற்சித்தது. அதனிடையே, கட்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் எல்லையின் அருகிலுள்ள கவாடா கிராமத்தில், சுமார் 20 கி.மீ. தொலைவிலிருந்து ஒரு டிரோனின் உடைந்த பாகங்கள் மீட்கப்பட்டன
எல்லையில் நிலவும் பதட்டம் காரணமாக குஜராத்தில் பட்டாசு, டிரோன்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, குஜராத் மாநில உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி சமூக வலைதளத்தில், "இந்த மாதம் 15 ஆம் தேதி வரை எந்தவொரு விழாக்களிலும் அல்லது நிகழ்வுகளிலும் பட்டாசுகளை வெடிக்கவோ, டிரோன்களை பறக்கவிடவோ அனுமதிக்கப்படாது. தயவுசெய்து ஒத்துழைத்து அனைத்து வழிகாட்டுதல்களையும் பின்பற்ற வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, தேச விரோத உணர்வுகளைப் பரப்பும் வகையில் சமூக வலைதளத்தில் பதிவிட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என குஜராத் மாநில அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும்
-
நன்றி மறந்த துருக்கி
-
'இந்தியா - பாக்., விவகாரத்தில் தலையிடுவது எங்கள் வேலையில்லை'
-
விளைநிலங்களை சேதப்படுத்தும் கால்நடைகள் சொர்ணவாரிக்கு தயாராகும் விவசாயிகள் வேதனை
-
மக்களிடம் வரவேற்பில்லாத உழவர் சந்தை விவசாயிகள் வராததால் கடைகள் 'வெறிச்'
-
இடவசதி இல்லாததால் வாடிக்கையாளர் கடும் அவதி
-
அமிர்தசரஸ் பொற்கோவில் மீதான பாக்., தாக்குதல் முறியடிப்பு