ஆதாரங்களை கொடுத்தாலும் பயங்கரவாத தொடர்பை மறுக்கும் பாக்.,: இந்திய தூதர்

வாஷிங்டன்: '' ஆதாரங்கள் கொடுத்தாலும், தாக்குதலுக்கு தொடர்பு உள்ளதை மறுத்து வருகிறது. அதேபோல், தற்போதும் மறுக்கிறது,'' என அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அமெரிக்காவிற்கான இந்திய தூதர் வினய் கவத்ரா அளித்த பேட்டியில் கூறியதாவது: பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள், காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலா பயணிகளை கொன்றது தான் பிரச்னையின் ஆரம்பம். மனைவி மற்றும் குழந்தைகள் முன்பு, பயங்கரவாதிகள் மதத்தின் அடிப்படையில் கொலை செய்தனர். பயங்கரவாதத்திற்கு எதிராகவே ' ஆபரேஷன் சிந்தூர்' துவக்கப்பட்டது.
இந்தியாவின் பதிலடி, கட்டுப்பாட்டுடன், ஒன்பதுஇடங்களில் பயங்கரவாத முகாம்கள் மீது மட்டுமே தாக்குதல் நடத்தப்பட்டது. அப்பாவி மக்களை கொடூரமாக கொன்றவர்கள் மீது மட்டுமே குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது.
ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. தற்போது உள்ள பிரச்னை பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீரை, அந்நாடு திருப்பித் தருவது மட்டுமே. பயங்கரவாதிகளுக்கு ஆதரவாகவே, எல்லையில் அத்துமீறி பாகிஸ்தான் தாக்குதல் நடத்துகிறது. பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு பதில், அவர்களுக்கு அந்நாடு ஆதரவு அளிக்கிறது.
மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னால் பாகிஸ்தான் உள்ளது. இதற்கான ஆதாரங்கள் கொடுத்தாலும், தாக்குதலுக்கு தொடர்பு உள்ளதை மறுத்து வருகிறது. அதேபோல், தற்போதும் மறுக்கிறது. பயங்கரவாதிகளுக்கு எதிராகவே இந்தியா தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த 3 தசாப்தங்களாக பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் ஆதரவு அளிப்பதை உலக நாடுகள் கவனத்தில் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும்
-
ஹிந்தி தெரியாததால் ரூ.1 லட்சம் கோடியை இழந்தேன் 'ஏர்செல்' சிவசங்கரன் வருத்தம்
-
நள்ளிரவில் தாக்குதல்: எல்லையில் பதற்றம்
-
காஷ்மீரில் பாகிஸ்தான் பீரங்கி தாக்குதல்: ஒருவர் பலி
-
ஊடகங்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள எச்சரிக்கை!: பொய்கள் பரவுவதை தடுக்க மத்திய அரசு அதிரடி
-
பாகிஸ்தானின் 3 விமானப்படை தளங்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல்
-
எல்லையில் ஊடுருவல் முயற்சி 7 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை