4.6 கிலோ கஞ்சா சிக்கியது

திருப்பூர்: திருப்பூரில் தனிப்படை போலீசார் சோதனையில் வடமாநில வாலிபர் கஞ்சா பொட்டலத்தை போட்டு விட்டு தப்பியோடினார். 4.6 கிலோவை போலீசார் மீட்டு விசாரிக்கின்றனர்.

திருப்பூர் மாநகர பகுதியில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்த அன்றாடம் வாகன தணிக்கை, பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன், ஓட்டல்களில் போலீசார் கண்காணித்து சோதனை செய்து வருகின்றனர்.

நேற்று காலை, வடக்கு எஸ்.ஐ., ராமு தலைமையிலான போலீசார் ரயில்வே ஸ்டேஷன் பகுதியில் ரோந்து மேற்கொண்டு சந்தேக நபர் களிடம் விசாரித்து வந்தனர்.

அப்போது, போலீசாரை பார்த்ததும், வடமாநில வாலிபர் பேக்கை கீழே போட்டு விட்டு தப்பியோடினார். சந்தேகமடைந்து பேக்கை சோதனை செய்த போது, 4.6 கிலோ கஞ்சா பொட்டலம் இருந்தது. இதை மீட்டு தப்பியோடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement