தடை தாண்டி சாதிப்பேன்: தேர்வு எழுதிய தாய் உறுதி

கோவை : கோவை உடையாம்பாளையம் பகுதியை சேர்ந்த லாவண்யா, 37, குடும்பச் சூழ்நிலையால் தனது கல்வியை பாதியில் விட்டுவிட்டார். தனது மகள் பத்தாம் வகுப்பு தேர்வுக்கு தயாராவதை கண்டு, மீண்டும் கல்வியைத் தொடர வேண்டும் என்ற ஆர்வம் எழுந்துள்ளது. இதையடுத்து, அவர் மீண்டும் படிக்கத் தொடங்கியுள்ளார்.
இந்நிலையில், தனது மகளுடன் சேர்ந்து பொதுத் தேர்வு எழுதிய அனுபவம் குறித்து, நம்மிடம் தனது அனுபவங்களை பகிர்ந்துகொள்கிறார்.
அவர் தெரிவித்ததாவது:
என் குடும்பத்தின் உறுதியான ஆதரவும் ஊக்கமுமே எனக்கு இந்த பயணத்தை தொடரச் செய்தது. 2023ல் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றேன், பின் 2024ல் பிளஸ் 1 தேர்வில் வெற்றிபெற்றேன். 2025ல் பிளஸ் 2 தேர்வை எழுதினேன், ஆனால் தேர்ச்சி பெற முடியவில்லை.
இருந்தாலும், என் மகள் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்துள்ளது. ஜூன் மாதத்தில் நடைபெறவுள்ள துணைத்தேர்வில் நிச்சயமாக பங்கேற்று வெற்றிபெறுவேன். உயர்கல்வியையும் தொடர்வேன். இவ்வாறு, அவர் கூறினார்.
மேலும்
-
ஆதாரங்களை கொடுத்தாலும் பயங்கரவாத தொடர்பை மறுக்கும் பாக்.,: இந்திய தூதர்
-
முப்படை தளபதிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை
-
பொய்த்தகவல் பரப்பி உலகத்தை ஏமாற்றும் பாகிஸ்தான்!
-
எல்லையோர மாநிலங்களில் பலத்த பாதுகாப்பு; குஜராத்தில் பட்டாசு, டிரோன்களுக்கு தடை!
-
பயணிகள் விமானங்களை கேடயமாக பயன்படுத்தும் பாகிஸ்தான்: இந்தியா குற்றச்சாட்டு
-
பாகிஸ்தான் ஏவிய ஏவுகணைகள் அனைத்தும் அழிப்பு; உறுதி செய்தது மத்திய அரசு