எல்லையில் மீண்டும் பாக்., அத்துமீறல்: இந்தியா பதிலடி

3

புதுடில்லி: எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் உரி, பூஞ்ச் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறி தாக்குதல் நடத்துகிறது. இதற்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்தது.

இந்தியாவின் தாக்குதலால் நிலைகுலைந்து போயுள்ள பாகிஸ்தான் தொடர்ந்து பதற்றத்தை அதிகரித்து வருகிறது. அந்நாட்டின் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் நமது ராணுவம் உரிய பதிலடி கொடுக்கிறது. இருப்பினும் அடங்க மறுக்கும் பாக்., எல்லையில் வாலாட்டி வருகிறது.

இந்நிலையில், எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் உரி செக்டாரில் இந்திய நிலைகளை நோக்கி பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. அந்த பகுதியில் துப்பாக்கிச்சூடு சத்தம் மற்றும் வெடிபொருட்கள் வெடிக்கும் சத்தம் கேட்பதாக அங்கிருந்து வரும் தகவல் தெரிவிக்கின்றன. இதற்கு இந்திய ராணுவம் கடுமையான பதிலடியை கொடுத்து வருகிறது.


வான் பாதுகாப்ப கவசம்





பாகிஸ்தான் அத்துமீறல் நடக்கும் நிலையில், காஷ்மீரில் வான் பாதுகாப்பு கவசம் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது.

Advertisement