வங்கிச் சேவையில் இடையூறு கூடாது: நிர்மலா சீதாராமன் உத்தரவு

புதுடில்லி: இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றம் ஏற்பட்டு உள்ள நிலையில், வங்கிச் சேவைகள் எந்த இடையூறும் இன்றி பொது மக்களுக்கு கிடைக்க வேண்டும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உத்தரவிட்டு உள்ளார்.
இரு நாடுகளுக்கு இடையே பதற்றம் ஏற்பட்டு உள்ள நிலையில், வங்கித்துறைகளின் செயல்பாடு குறித்து பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளின் அதிகாரிகளுடன் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனையில், நிர்மலா சீதாராமன் எந்த எதிர்பாராத சூழ்நிலையையும் எதிர்கொள்ள அனைத்து வங்கிகளும் தயாராக வேண்டும். இதற்காக அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும். பொது மக்கள் மற்றும் தொழிலதிபர்களுக்கு வங்கி மற்றும் நிதிச் சேவையில் எந்த இடையூறும் ஏற்படாமல் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
மக்களுக்கு நேரடியாக வங்கி சேவையும், டிஜிட்டல் சேவைகளும் கிடைக்க செய்வதுடன் . ஏடிஎம்.,களில் போதியளவு பணம் இருக்க வேண்டும். யுபிஐ மற்றும் இணையதள சேவைகள் தங்கு தடையின்றி தொடர நடவடிக்கை தேவை. எந்த சூழ்நிலையையும் சமாளிக்க தேவையான நடவடிக்கைகளையும் செய்வது குறித்து ஒத்திகை செய்து பார்க்க வேண்டும் என உத்தரவிட்டார்.
மேலும் எல்லையோரங்களில் உள்ள வங்கிக் கிளைகளில் பணியாற்றும் ஊழியர்களின் பாதுகாப்பு குறித்து கவலை தெரிவித்த நிர்மலா சீதாராமன், அதற்கு வங்கித்துறை அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.

மேலும்
-
ரூ.7 ஆயிரம் சம்பளத்தில் பணிவாய்ப்பு பெறுவதற்கு ரூ.7 லட்சம்பே! அங்கன்வாடி பணிக்கு உயர்கல்வி முடித்தோரும் மனு
-
ஒன்றியங்கள் பிரிப்பு விவகாரம்: தி.மு.க., நிர்வாகிகள் எதிர்ப்பு
-
தி.மு.க.,வுக்கு சென்ற கிறிஸ்துவ ஓட்டு; விஜய் பக்கம் திருப்பிவிட முயற்சி
-
ஒவ்வொருவரையும் உற்று நோக்குவேன்: நிர்வாகிகள் கூட்டத்தில் கட்சியினருக்கு ஸ்டாலின் எச்சரிக்கை
-
பாகிஸ்தான் ராணுவ தளங்களை கதறவிட்ட ஏ.டி.ஜி.எம்.,
-
வர்ராரு.. வர்ராரு.. அழகரு வர்ராரு... களை கட்டுகிறது கள்ளழகர் கோயில்