காஷ்மீரில் மீண்டும் ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்திய பாக்.,: தாக்கி அழித்தது இந்தியா

1

ஜம்மு: ஜம்மு காஷ்மீரின் சம்பா பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்த முயற்சி செய்தது. இதனை இந்தியா அழித்தது.


காஷ்மீர் முதல் குஜராத் வரை நேற்று எல்லை ஒட்டிய பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் நேற்று ட்ரோன்களை ஏவி தாக்குதல் நடத்தியது. உடனடியாக ராணுவம் அதனை தாக்கிஅழித்தது. பாகிஸ்தானுக்கு உரிய பதிலடி அளிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்து இருந்தது.


மின்சாரம் துண்டிப்பு






முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஹரியானாவின் அம்பாலா, பஞ்சகுலா, பஞ்சாப்பின் பிரோஸ்பூர், ராஜஸ்தானின் ஜெய்சால்மர், காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டன. மேலும் காஷ்மீரில் வான் பாதுகாப்பு கவசம் செயல்படுத்தப்பட்டது.


இந்நிலையில், ஜம்முவின் சம்பா மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் டிரோன்களை ஏவி தாக்கியதாகவும், அந்த பகுதியில் வெடிச்சத்தம் கேட்டதாகவும் தெரியவந்துள்ளது. உடனடியாக, இந்தியா அதனை இடைமறித்து தாக்கி அழித்தது.


குஜராத்தின் கட்ச் மாவட்டத்திலும் மறு அறிவிப்பு வரும் வரை மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளது.

ஸ்ரீநகர் விமான நிலையம் அமைந்த பகுதியிலும் டிரோன் தாக்குதல் நடந்தது. உடனடியாக அதன் எதிர்ப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.



எச்சரிக்கை ஒலி





அதேபோல், பதன்கோட், அக்னூர் உள்ளிட்ட காஷ்மீரின் ஆறு இடங்களில் பாகிஸ்தான் ராணுவம் டிரான்களை வீசி தாக்குதல் நடத்தியது. இதனை இந்தியா தாக்கி அழித்தது. இதனையடுத்து சைரன் ஒலிக்கப்பட்டு, மக்கள் பாதுகாப்பான இடம் நோக்கி செல்ல அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

ராஜஸ்தானில்




ராஜஸ்தானின் ஜெய்ப்பூர், பொக்ரான், பஞ்சாபின் அமிர்தசரஸ் நகரங்களிலும் பாகிஸ்தான் ராணுவம் டிரோன்களை வீசியது. அதனை இந்தியா அழித்தது.



பாதுகாப்பான இடங்களில்





காஷ்மீரின் 3 மாவட்டங்களில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.




முதல்வர் கோரிக்கை





இதனிடையே முதல்வர் உமர் அப்துல்லா வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: மக்கள் யாரும் தெருவில் நடமாட வேண்டாம். வீடுகளில் அல்லது பாதுகாப்பான இடத்தில் தங்கியிருக்க வேண்டும். வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். உறுதி செய்யப்படாத தகவல்களை பரப்ப வேண்டாம் எனக்கூறியுள்ளார்.

Advertisement