பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் ஒரு வாரத்துக்கு ஒத்திவைப்பு: போர் பதற்றம் காரணமாக பி.சி.சி.ஐ., முடிவு

2

மும்பை: இந்தியா - பாகிஸ்தான் இடையே உச்சகட்ட பதற்றம் நிலவி வரும் நிலையில், நடப்பு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரைஒரு வாரத்துக்கு ஒத்திவைக்கப்படுவதாக பி.சி.சி.ஐ., அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.


@1brஇந்தியா - பாகிஸ்தான் இடையிலான போர் பதட்டம் உச்சத்தை எட்டியுள்ளது. எல்லையோர மாநிலங்களில் அசாதாரண சூழல் நிலவுகிறது. இத்தகைய சூழலில், பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படுவது, பொதுமக்களில் ஒரு பிரிவினர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இந்த தொடரில் மொத்தம் நடக்க வேண்டிய 74 போட்டிகளில் 58 ஆட்டங்கள் முடிவடைந்து விட்டன. நேற்று, தரம்சாலாவில் டில்லி, பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான ஆட்டம், பாதியில் நிறுத்தப்பட்டது. மேலும், ரசிகர்கள் மைதானத்தில் இருந்து உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.


இந்நிலையில், போர் பதற்றம் காரணமாக, பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்கப்படுவதாக பி.சி.சி.ஐ., அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Advertisement