போர் பதற்றம் எதிரொலி: டில்லி எய்ம்ஸ் மருத்துவமனை ஊழியர் விடுமுறை ரத்து

புதுடில்லி: போர் பதற்றம் காரணமாக டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் ஊழியர்களின் விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்திய எல்லையோர நகரங்களை குறிவைத்து ஏவப்படும் பாகிஸ்தானின் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தி நமது ராணுவம் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.
பதட்டமான இந்த சூழலில் எய்ம்ஸ் மருத்துவமனை ஊழியர்களுக்கான விடுமுறைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
டில்லி எய்ம்ஸ் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் உத்தரவின்படி, மருத்துவ காரணங்களுக்காக தவிர, எந்தவொரு அதிகாரிக்கும் நிலைய விடுப்பு உட்பட எந்த வகையான விடுப்பும் மறு உத்தரவு வரும் வரை வழங்கப்படக்கூடாது.
ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட விடுப்பு ஏதேனும் இருந்தால், அது ரத்து செய்யப்படுகிறது என்றும், விடுப்பில் உள்ள அதிகாரிகள் உடனடியாக தங்கள் பணிகளைத் தொடங்க அறிவுறுத்தப் படுகிறார்கள். இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்
-
ரூ.7 ஆயிரம் சம்பளத்தில் பணிவாய்ப்பு பெறுவதற்கு ரூ.7 லட்சம்பே! அங்கன்வாடி பணிக்கு உயர்கல்வி முடித்தோரும் மனு
-
ஒன்றியங்கள் பிரிப்பு விவகாரம்: தி.மு.க., நிர்வாகிகள் எதிர்ப்பு
-
தி.மு.க.,வுக்கு சென்ற கிறிஸ்துவ ஓட்டு; விஜய் பக்கம் திருப்பிவிட முயற்சி
-
ஒவ்வொருவரையும் உற்று நோக்குவேன்: நிர்வாகிகள் கூட்டத்தில் கட்சியினருக்கு ஸ்டாலின் எச்சரிக்கை
-
பாகிஸ்தான் ராணுவ தளங்களை கதறவிட்ட ஏ.டி.ஜி.எம்.,
-
வர்ராரு.. வர்ராரு.. அழகரு வர்ராரு... களை கட்டுகிறது கள்ளழகர் கோயில்