நிலத்தை அளக்க ரூ.2 ஆயிரம் லஞ்சம்: சர்வேயர், கிராம உதவியாளர் கைது

3


நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் நிலத்தை அளந்து சான்றிதழ் வழங்க ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சர்வேயர் மற்றும் கிராம உதவியாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.


கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் மேல தெருவை சேர்ந்தவர் பத்மநாபன்(71). ஓய்வு பெறற ஆசிரியர். இவருக்கு சொந்தமான நிலத்தை அளக்க அகஸ்தீஸ்வரம் தாசில்தார் அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.இது தொடர்பாக நீண்டகரை கிராம உதவியாளர் ராஜாவை தொடர்பு கொண்ட போது, நிலத்தை அளந்து சான்று தர ரூ.2 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.


லஞ்சம் அளிக்க விரும்பாத ஸ்ரீபத்மநாபன், மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். டிஎஸ்பி சால்வன் துரை ஆலோசனையின் பேரில் ரசாயனம் தடவிய ரூ.2 ஆயிரம் மதிப்பு நோட்டுகளை சர்வேயர் முகமது அஜ்மல் கான் மற்றும் ராஜாவிடம் ஸ்ரீபத்மநாபன் கொடுத்தார். அதனை வாங்கிய இருவரையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement