பாக்., தாக்குதலை முறியடித்து இந்திய நிலைகளை பாதுகாத்த ஆகாஷ் ஏவுகணை!

2


புதுடில்லி: இந்தியா மீதான பாகிஸ்தானின் தாக்குதல்களை முறியடிக்க திறம்பட ஆகாஷ் வான் பாதுகாப்பு ஏவுகணை பயன்படுத்தப்பட்டு உள்ளது.


பாகிஸ்தானின் ட்ரோன் தாக்குதலை ஆகாஷ் வான் பாதுகாப்பு ஏவுகணை முறியடித்துள்ளது. பாகிஸ்தான் வீசிய ஏவுகணைகள், ட்ரோன்களை ஆகாஷ் வான் பாதுகாப்பு ஏவுகணை துல்லியமாக கண்டறிந்து சுட்டு வீழ்த்தியது.



* முற்றிலும் உள்நாட்டுத் தயாரிப்பான ஆகாஷ் ஏவுகணைகள் மணிக்கு 4 ஆயிரத்து 200 கிலோ மீட்டர் வேகத்தில் பாய்ந்து சென்று தாக்கும் திறன் கொண்டது.

* இந்திய விமானப்படையும், ராணுவமும் இந்த ஏவுகணைகளைப் பயன்படுத்தியே பாகிஸ்தான் துவம்சம் செய்துள்ளன.



* பாக். ஏராளமான ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை ஏவிய உடனே கண்காணித்து, ஆகாஷ் வான் பாதுகாப்பு ஏவுகணை அழித்துள்ளது.


* ஆகாஷ் ஏவுகணைக்கு ஒரே நேரத்தில் எதிரியின் பல இலக்குகளை குறி வைத்து அழிக்கும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement