எல்லையில் நிலவும் பதற்றம்; முப்படை தளபதிகளுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை

புதுடில்லி: எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், முப்படைகளின் தலைமை தளபதி உடன் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தினார்.
பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் ட்ரோன்கள், ஏவுகணைகளை வீசி தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. இந்நிலையில், முப்படை தளபதிகளுடன், பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தினார்.
போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் முப்படை தளபதிகளுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தினார். பாகிஸ்தான் தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பது மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
அமித்ஷா ஆலோசனை
டில்லியில் தனது இல்லத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடத்தினார். கூட்டத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், எல்லை பாதுகாப்பு படை, சி.ஐ.எஸ்.எப்., இயக்குநர்கள், துணை ராணுவ படை அதிகாரிகள், உள்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். எல்லையின் தற்போதைய நிலை குறித்து ஆலோசனை நடந்தது.
மத்திய அமைச்சர் நட்டா ஆலோசனை
எல்லை பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், மருத்துவ உள்கட்டமைப்பு மற்றும் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்து, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் நட்டா அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அவர் மருந்து பொருட்கள் கையிருப்பு இருப்பதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளார்.



மேலும்
-
காஷ்மீரில் மீண்டும் டிரோனை ஏவிய பாக்.,: தாக்கி அழித்தது இந்தியா
-
வங்கிச் சேவையில் இடையூறு கூடாது: நிர்மலா சீதாராமன் உத்தரவு
-
எல்லையில் மீண்டும் பாக்., அத்துமீறல்: இந்தியா பதிலடி
-
பாகிஸ்தான் தனது செயல்களுக்காக மன்னிப்பு கேட்கணும்; பிரசாந்த் கிஷோர் காட்டம்
-
ஆதாரங்களை கொடுத்தாலும் பயங்கரவாத தொடர்பை மறுக்கும் பாக்.,: இந்திய தூதர்
-
முப்படை தளபதிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை