இந்தியா தாக்குதலில் பாக்., ராணுவ தளங்கள், முகாம்கள் சேதம்!

புதுடில்லி: இந்தியா அளித்த பதிலடியில் பாகிஸ்தான் ராணுவ தளங்கள், முகாம்கள் சேதமடைந்துள்ளது தெரியவந்துள்ளது.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பயங்கரவாதிகள் முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. இதனையடுத்து பதில் தாக்குதல் நடத்தப்போவதாக கூறி பாகிஸ்தான் ராணுவம் நேற்று ஏவுகணை, டுரோன்களை வீசியதால் பதற்றம் அதிகரித்து உள்ளது. இதனை இந்திய ராணுவம் உடனடியாக தாக்கி அழித்தது. மேலும், எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்கி வருகிறது. இதற்கும் இந்திய ராணுவம் உடனடியாக பதிலடி கொடுத்தது.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மற்றும் சம்பா பகுதிக்கு எதிராக உள்ளபாகிஸ்தான் முகாம்கள், இந்திய ராணுவத்தின் தாக்குதலில் சேதம் அடைந்துள்ளது தெரியவந்துள்ளது.
ராணுவ தளங்கள்
அதேபோல், உரி, பூஞ்ச், நவ்சேரா, ஆர்எஸ் புரா பகுதி அருகே அமைந்துள்ள பாகிஸ்தான் ராணுவ தளங்களும் இந்தியாவின் தாக்குதலில் சேதமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே உள்ள வெடிபொருட்கள் மற்றும் ஆயுத கிடங்குகளும் சேதமடைந்துள்ளதாகவும் தெரிகிறது.
மேலும்
-
பல்மைரா கடற்கரையில் கவர்னர் கைலாஷ்நாதன் ஆய்வு
-
13 முதல் 29 வரை 'மக்களுடன் முதல்வர்' முகாம்
-
சேரிங்கிராஸ் தொட்டபெட்டா இடையே வாகனங்கள் நிறுத்த தடை
-
எஸ்.வி.என்., மெட்ரிக் பள்ளி பிளஸ் 2 தேர்வில் 100% தேர்ச்சி
-
புதுச்சேரி கவர்னர் மாளிகைக்கு 3வது முறையாக வெடிகுண்டு மிரட்டல்
-
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்