பாகிஸ்தான் ராணுவ தளங்களை கதறவிட்ட ஏ.டி.ஜி.எம்.,

1


புதுடில்லி: இந்தியா - பாக்., இடையே போர் பதற்றம் அதிகரித்ததும், எல்லை கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் இருந்து பாக்., ராணுவம் நம் மீது பீரங்கி தாக்குதலை தொடுத்தது. இதை தொடர்ந்து, ஏ.டி.ஜி.எம்., எனப்படும், பீரங்கி எதிர்ப்பு வழிகாட்டு ஏவுகணைகளை செலுத்தி, எல்லை பகுதியில் உள்ள பாக்., ராணுவ தளங்களை நம் படையினர் சின்னாபின்னமாக்கினர்.


* ஏ.டி.ஜி.எம்., எனப்படும், பீரங்கி எதிர்ப்பு வழிகாட்டு ஏவுகணை முற்றிலும் நவீனமானது.


* ஏ.டி.ஜி.எம்.,கள், வடிவ மின்னூட்டம் எனப்படும் ஒன்றை பயன்படுத்துகின்றன. இது ஒரு சிறப்பு வகை வெடிபொருள். இது அதன் அனைத்து சக்தியையும் ஒரே திசையில் குவிப்பதால், தடினமான பீரங்கி கவசத்தை துளைக்கும் அளவுக்கு வலிமையானது.


* இந்த ஏ.டி.ஜி.எம்.,களை, இரவு - பகல், அதிக குளிர், வெப்பம் என எந்த தட்பவெப்ப நிலையிலும் பயன்படுத்த முடியும்.


* இந்த பீரங்கி எதிர்ப்பு வழிகாட்டி ஏவுகணையை தோளில் சுமந்தும், ஒரே இடத்தில் வைத்தும், வாகனம் அல்லது விமானங்களில் இருந்து செலுத்த முடியும்.


* சில நவீன வகை ஏ.டி.ஜி.எம்.,கள் ஒன்றன்பின் ஒன்றாக இருமுறை தாக்கும் திறன் கொண்டவை. முதலில் வெளியேறும் ஏவுகணை, பீரங்கியின் வெளிப்புற பாதுகாப்பு கவசத்தை அழிக்கும். இரண்டாவதாக வெளியேறும் ஏவுகணை, பீரங்கியின் அடிப்புறம் உள்ள முக்கிய கவசத்தை தகர்க்கும்.

Advertisement