தினமலர் செய்தி எதிரொலி பயன்பாட்டிற்கு வந்த குடிநீர் மையம்

சென்னை, சென்னையின் முக்கிய சுற்றுலா தலமான மெரினா கடற்கரைக்கு, உள்ளூர் மட்டுமின்றி, வெளியூர்களில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். தற்போது, பள்ளி, கல்லுாரிகள் விடுமுறை என்பதால், வழக்கத்தைவிட மக்கள் வரத்து அதிகமாக உள்ளது.

இந்நிலையில், கடற்கரையில் நான்கு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையங்கள், செயல்படாமல் முடங்கி கிடந்தன. இதனால் அங்குள்ள கடைகளில் கூடுதல் விலைக்கு தரமற்ற குடிநீரை வாங்கி பருகும் நிலை ஏற்பட்டது.

இதுகுறித்து நமது நாளிதழில் புகைப்படத்துடன் கூடிய செய்தி வெளியானது. அதை தொடர்ந்து, குடிநீர் மையம் மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

Advertisement