ஓசூர் பகுதியில் கனமழை

ஓசூர், மே 10
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், மே மாதம் துவங்கியதில் இருந்தே, ஆங்காங்கு மழை பெய்து வருகிறது. கடந்த, 1ம் தேதி முதல், நேற்று முன்தினம் வரை மாவட்டம் முழுவதும், 404.39 மி.மீ., மழை பதிவாகி உள்ளது.
ஒருபுறம் கோடை வெயில் வாட்டி எடுக்கும் நிலையில், அவ்வப்போது மழையும் பெய்வதால், வெயிலின் தாக்கம் குறைகிறது. ஓசூர் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று காலை முதல் மாலை வரை, வழக்கம் போல் கோடை வெயில் வெளுத்து
வாங்கியது.
மாலை, 5:45 மணிக்கு மேல், ஓசூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில், இடியுடன் கூடிய கனமழை தொடர்ந்து பெய்தது. நகரின் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. அதனால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். அதுமட்டுமின்றி பணி முடிந்து நேற்று மாலை வீட்டிற்கு திரும்பிய தொழிலாளர்கள், மழையில் நனைந்தபடி இருசக்கர வாகனங்களில் சென்றனர். கோடை மழையால், ஓசூர் பகு தியில் வெயிலின் தாக்கம் குறைந்து, குளிர்ந்த காற்று வீசியது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

Advertisement