திறந்தவெளி கிணறுக்கு மூடி அமைக்க கோரிக்கை

ஸ்ரீபெரும்புதுார்:குன்றத்துார் ஒன்றியம், வட்டம்பாக்கம் ஊராட்சி பெருமாள் கோவில் தெருவில் 30க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. குடியிருப்புகளுக்கு அருகே, தனியாருக்கு சொந்தமான இடத்தில் கிணறு உள்ளது. பயன்பாடு இல்லாத இந்த கிணறு பாதுகாப்பு மூடி இல்லாமல் திறந்த நிலையில் உள்ளது.

கிணற்றின் அருகில் விளையாடும் அப்பகுதி குழந்தைகள் தவறி விழுந்து, அசம்பாவிதம் ஏற்படும் சூழல் உள்ளது.

எனவே, குழந்தைகள் பாதுகாப்பு கருதி, கிணற்றின் மேல்பகுதியில் பாதுகாப்பு மூடி அமைக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Advertisement