பர்கூர் வேளாங்கண்ணி மெட்ரிக் பள்ளி பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி


கிருஷ்ணகிரி,கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் வேளாங்கண்ணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்த, 566 மாணவ, மாணவியரும் தேர்ச்சி பெற்று, 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளி என்ற பெருமையை சேர்த்துள்ளனர்.
பள்ளியில் படித்த சுனில் என்ற மாணவர், 600க்கு, 597 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் மூன்றாமிடம் பெற்று சாதனை படைத்துள்ளார். இதே போல், மாணவர் ராகுல்கவுசிக், 594 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடமும், மாணவி ஸ்ரீபிரியா, 593 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடத்தையும் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.
சாதனை படைத்த மாணவர்களுக்கு பள்ளி வளாகத்தில் பாராட்டு விழா நடந்தது.
வேளாங்கண்ணி கல்வி குழுமங்களின் தாளாளர் கூத்தரசன் தலைமை வகித்து, முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவியருக்கு பொன்னாடை அணிவித்து, கேடயங்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். விழாவில், பர்கூர் பள்ளியின் முதல்வர் மெரினா பலராமன், துணை முதல்வர் ஜலஜாக்ஸி, தலைமை ஆசிரியர் குலசேகரபாண்டியன், பள்ளியின் பொறுப்பாளர் யுவராஜ், வேளாங்கண்ணி பள்ளி குழுமங்களின் முதல்வர்கள் ராஜேந்திரன், அன்பழகன், விவேக், பூங்காவனம், டேனிஷ்ஜோசப், வினோத், ஹாசாஜி, துறைத் தலைவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பங்கேற்றனர்.

Advertisement