சாலை விபத்தில் இருவர் பலி

கோவை, : குனியமுத்துார், இடையர்பாளையத்தை சேர்ந்தவர் சையது சலீம், 59. இவர் கடந்த 8ம் தேதி குனியமுத்துார் பகுதியை சேர்ந்த சுகுமார், 30 என்பவரது ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார்.

ஆட்டோ பாலக்காடு ரோடு, சுண்ணாம்பு கால்வாய் பகுதியில் சென்று கொண்டிருந்த போது, கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பில் மோதியது.

இதில் கீழே விழுந்த சையது சலீம் தலையில், பலத்த காயம் ஏற்பட்டது. பொது மக்களை அவரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர் ,அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தார். மேற்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

* இதேபோல், காளப்பட்டியை சேர்ந்த செந்தில்வேல் முருகன், 58, திருச்சி சாலை சிங்காநல்லுார் அருகில் சாலை ஓரத்தில் நடத்து சென்றார்.

அப்போது, அவ்வழியாக வந்த கேரளா பதிவெண் கொண்ட லாரி ஒன்று, அவர் மீது மோதியது. பலத்த காயமடைந்த அவர், கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சம்பவம் குறித்து கிழக்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement