பெட்ரோல் தட்டுப்பாடு என வதந்தி பீதி வேண்டாம் என்கிறது ஐ.ஓ.சி.,
'இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் பெட்ரோலிய பொருட்கள் விற்பனையகங்களில் போதிய அளவில் எண்ணெய் இருப்பு உள்ளது.
'தட்டுப்பாடு ஏற்படும் என்ற பீதி வேண்டாம். மக்கள் அமைதியாக இருக்க வேண்டியது அவசியம்' என, நாட்டின் பொதுத்துறை பெட்ரோலிய நிறுவனங்களில் ஒன்றான இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள போர் பதற்றத்தால், நாட்டின் எல்லைப்புற மாநிலங்களில் உள்ள சில நகரங்களில் இருக்கும் பெட்ரோல் பங்க்குகளில் நீண்ட வரிசையில் நின்று மக்கள் பெட்ரோல், டீசல் வாங்குவதாக சில ஊடகங்களில் செய்தி பரவியது.
அதையடுத்து, இந்தியன் ஆயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
நாடு முழுதும் போதுமான அளவுக்கு பெட்ரோலிய பொருட்களின் இருப்பு உள்ளது. அவற்றை வினியோகிக்கும் முறையும் இதுவரை முறையாக உள்ளது. இந்த நெருக்கடியான நேரத்தில் மக்கள் செய்ய வேண்டியது, அமைதியாக இருப்பது மட்டும் தான்.
அமைதியாக இருந்து, பெட்ரோலிய பொருட்களை வாங்குவதற்காக முண்டியடிக்காமல், வரிசையில் நின்று வாங்கிச் செல்ல வேண்டும். தேவையற்ற வதந்திகளை நம்ப வேண்டாம். தட்டுப்பாடு ஏற்படும் என்ற பீதி வேண்டாம். போதுமான அளவு பெட்ரோலிய பொருட்கள் இருப்பு உள்ளன.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்
-
செம்மொழி நாள் விழா பேச்சு, கட்டுரை போட்டி
-
வீடு வாங்கும் போது வாகன நிறுத்துமிட விஷயத்தில் கவனம் தேவை!
-
பால் குளிரூட்டும் இயந்திரங்கள் திறந்த வெளியில் கிடந்து வீணாகிறது
-
வீடுகளுக்கு எப்.ஆர்.பி., தொட்டிகளை வாங்கும்போது கவனிக்க வேண்டியவை!
-
கட்டுமான ஒப்பந்தம் இன்றி வீடு கட்டும் வேலையை ஒப்படைக்காதீர்!
-
ஏலத்தோட்டங்களில் நத்தைகள் மகசூல் பாதிக்கும் அவலம்