முப்படைகள் எப்போதும் தயார் நிலையில் இருக்கும்: இந்தியா

புதுடில்லி: '' இந்தியாவின் ஏவுகணை மற்றும் விமான தளங்களை சேதப்படுத்தியதாக பாகிஸ்தான் சொல்வது அனைத்தும் பொய்,'' என இந்தியா தெரிவித்து உள்ளது. போர்நிறுத்தம் ஏற்பட்டாலும், முப்படைகள் எப்போதும் தயார் நிலையில் இருக்கும் எனவும் தெரிவித்து உள்ளது.
அப்போது சோபியா குரேஷி கூறியதாவது: இந்தியாவின் எஸ் 400 வான் பாதுகாப்பு கவசம், பிரமோஸ் ஏவுகணையை ஜேஎப் 17 மூலம் சேதப்படுத்தியதாக பாகிஸ்தான் கூறுவது தவறு.
இரண்டாவதாக, சிர்சா, ஜம்மு, பதன்கோட், பதிண்டா, நலியா மற்றும் பூஜ் நகரில் உள்ள விமானபடை தளங்கள் சேதப்படுத்தப்பட்டதாக தவறான தகவல் பரப்பப்படுகிறது. இந்த தகவலும் முற்றிலும் பொய்.
மூன்றாவதாக, சண்டிகர் மற்றும் வியாஸ் நகரில் உள்ள வெடிமருந்து கிடங்குகள் சேதம் அடைந்ததாகவும் பாகிஸ்தான் தவறான பிரசாரத்தை பரப்புகிறது. மசூதிகளை இந்தியா சேதப்படுத்தியதாக கூறுவதும் பொய். இந்தியா மதசார்பற்ற நாடு. இந்திய அரசியல் மாண்புகளை, இந்திய ராணுவம் அழகாக பிரதிபலிக்கிறது.
கமாண்டோர் ரகு நாயர்
கடல், வான் மற்றும் நிலத்தில் அனைத்து ராணுவ நடவடிக்கைகளையும் நிறுத்தி வைக்க புரிந்துணர்வு ஏற்பட்டுள்ளது. இது குறித்த இந்திய ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படைக்கு அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது. நமது நாட்டின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டை பாதுகாக்கவும் உறுதிபூண்டுள்ளோம். மேலும் எப்போதும் விழிப்புடனும் தயார் நிலையிலும் முப்படைகள் இருக்கும்.
பாகிஸ்தானின் ஒவ்வொரு தவறான பிரசாரத்திற்கும் வலிமையான பதில் அளிக்கப்பட்டு உள்ளது. எதிர்காலத்தில் ஏற்படும் மோதலுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும். நமது நாட்டை பாதுகாக்க தேவையான நடவடிக்கை எடுக்க எப்போதும் தயார் நிலையல் இருப்போம்.
விங் கமாண்டர் வியோமிகா சிங்
இந்தியாவிற்கு எதிரான நடவடிக்கைக்கு பயன்படுத்தப்பட்ட இடங்கள் மற்றும் பயங்கரவாத முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. எந்த மத வழிபாட்டு தலத்தையும் இந்தியா குறிவைக்கவில்லை.
இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்திய பாகிஸ்தானுக்கு அளித்த பதிலடியில் அந்நாட்டிற்கு கடுமையான மற்றும் தாங்க முடியாத இழப்பு ஏற்பட்டு உள்ளது. நிலம் மற்றும் வானில் ஏராளமான இழப்புகளை ஏற்பட்டு உள்ளது. ஸ்கார்து, ஜகோபாபாத் மற்றும் போலாரி என பாகிஸ்தானின் முக்கியமான விமானபடை தளங்களுக்கு கடும் சேதம் ஏற்பட்டது.
எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் உள்ள ராணுவ கட்டமைப்புகள், கட்டளை மையங்கள் மற்றும் தளவாடங்களுக்கும் கணிக்க முடியாத சேதம் ஏற்பட்டு உள்ளது. பாகிஸ்தானின் வான் பாதுகாப்புக்கு உருாக்கப்பட்ட ரேடார் மற்றும் ஆயுத அமைப்பு சேதப்படுத்தப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும்
-
புதுச்சேரியில் நாளை மதுக்கடைகளை மூட கலால்துறை உத்தரவு
-
போர் நிறுத்தம் அறிவித்தும் மீண்டும் எல்லையில் பாக்., தாக்குதல்
-
'ஆப்பரேஷன் சிந்தூர்' பெயரில் வர்த்தக முத்திரையா: சுப்ரீம் கோர்ட்டில் பொது நல வழக்கு
-
பிரதமர் தலைமையில் உயர்மட்ட ஆலோசனை!
-
இந்தியா - பாக்., போர் நிறுத்தம்: தலைவர்கள் வரவேற்பு
-
முடிவுக்கு வந்தது போர்; காஷ்மீரில் இனிப்பு வழங்கி மக்கள் கொண்டாட்டம்!