பாகிஸ்தான் சொல்வது பொய்; மறுத்தது ஆப்கன் அரசு!

காபூல்: இந்தியா பாகிஸ்தான் இடையே இன்று மாலை 5 மணி முதல் போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், 'எங்கள் மீது குறிவைத்து இந்தியா தாக்கியதாக பாகிஸ்தான் கூறுவது தவறு' என்று ஆப்கானிஸ்தான் மறுத்தது.
இந்தியா -பாகிஸ்தான் இடையிலான போர், இன்று 10ம் தேதி மாலை 5 மணியுடன் முடிவுக்கு வந்துள்ளது. முன்னதாக, இன்று அதிகாலை பேட்டி அளித்த பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர், 'இந்திய ஏவுகணை, ஆப்கானிஸ்தானை தாக்கியதாக' குற்றம் சாட்டியிருந்தார். பாகிஸ்தானின் இந்த குற்றச்சாட்டை ஆப்கன் ராணுவ செய்தி தொடர்பாளர் இனயத்துல்லா கவாரிஸ்மி, மறுத்தார்.
இது குறித்து இனயத்துல்லா கவாரிஸ்மி கூறியதாவது: எங்கள் மீது தாக்குதல் குறித்து பாகிஸ்தான் கூறிய குற்றச்சாட்டுகளில் நம்பகத்தன்மை, எந்த உண்மையும் இல்லை என்று கூறினார்.
இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி கூறுகையில், 'இந்தக் குற்றச்சாட்டு முற்றிலும் அபத்தமானது. கடந்த ஒன்றரை ஆண்டுகளில் பல முறை ஆப்கானிஸ்தானில் பொதுமக்கள் உள்கட்டமைப்பை குறிவைத்து தாக்குதல் நடத்திய நாடு எது என்பதை ஆப்கன் மக்களுக்கு நினைவூட்ட வேண்டிய அவசியமில்லை என்றார்.
போர் நிறுத்தம்
இவ்வாறு இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் தரப்பினர் கூறிய நிலையில், இன்று மாலை 5 மணியுடன் இந்தியாவும், பாகிஸ்தானும் போர் நிறுத்தத்தை அமல் செய்வதாக அறிவித்துள்ளன.
வாசகர் கருத்து (1)
K V Ramadoss - Chennai,இந்தியா
10 மே,2025 - 19:47 Report Abuse

0
0
Reply
மேலும்
-
புதுச்சேரியில் நாளை மதுக்கடைகளை மூட கலால்துறை உத்தரவு
-
போர் நிறுத்தம் அறிவித்தும் மீண்டும் எல்லையில் பாக்., தாக்குதல்: இந்தியா பதிலடி
-
'ஆப்பரேஷன் சிந்தூர்' பெயரில் வர்த்தக முத்திரையா: சுப்ரீம் கோர்ட்டில் பொது நல வழக்கு
-
பிரதமர் தலைமையில் உயர்மட்ட ஆலோசனை!
-
இந்தியா - பாக்., போர் நிறுத்தம்: தலைவர்கள் வரவேற்பு
-
முடிவுக்கு வந்தது போர்; காஷ்மீரில் இனிப்பு வழங்கி மக்கள் கொண்டாட்டம்!
Advertisement
Advertisement