70 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய வருமான வரி கமிஷனர் கைது

4

ஐதராபாத்: ஐதராபாத்தில், 70 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய வருமான வரித்துறை கமிஷனர் ஜீவன் லால் லாவிடியா மற்றும் நான்கு பேரை சி.பி.ஐ., அதிகாரிகள் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.


2004ம் ஆண்டு பேட்ச் ஐ.ஆர்.எஸ்., அதிகாரியான ஜீவன் லால் லாவிடியா, ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு லஞ்சம் கேட்டதாக சி.பி.ஐ.,க்கு தகவல்கள் கிடைத்ததைத் தொடர்ந்து, சமீபத்தில் அவர் மீது எ.ப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்பட்டது.


அதை தொடர்ந்து ஜீவன் லால் லாவிடியா மீது கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்தது. ஐதராபாத், டில்லி உள்ளிட்ட இடங்களில் சோதனைகள் மேற்கொண்டு பணம் மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்த நிலையில், இன்று சி.பி.ஐ., அதிரடி நடவடிக்கை எடுத்தது.
ரூ.70 லட்சம் லஞ்சம் வாங்கிய ஜீவன் லால் லாவிடியா மற்றும் நான்கு பேரை அதிகாரிகள் கைது செய்தனர். இவர் மீது ஐ.பி.சி. 120பி (குற்ற சதி)ஊழல் தடுப்புச் சட்டம் (லஞ்சம் தொடர்பான பிரிவுகள்) பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement