இடிகரையில் திருட்டு போலீசார் விசாரணை
பெ.நா.பாளையம்: இடிகரையில் நடந்த திருட்டு தொடர்பாக, பெரியநாயக்கன்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இடிகரை அங்காளம்மன்புரத்தில் வசிப்பவர் இளைய பல்லவன், 34. தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். இவர் உருமாண்டபாளையத்தில் உள்ள தனது அண்ணன் வீட்டுக்கு சென்று விட்டு காலை வீடு திரும்பினார். வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு, திறந்து கிடந்தது. பீரோவில் இருந்த ஒன்றரை பவுன் தங்க நகையை, யாரோ திருடி சென்று விட்டனர். இது குறித்து, போலீசில் புகார் செய்தார். பெரியநாயக்கன்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement