59 வாகனங்களில் குறைபாடு ஆத்துார் வட்டார போக்கு
வரத்து துறை சார்பில், தனியார் பள்ளி வாகனங்களின் பாதுகாப்பு குறித்த ஆய்வு, தலைவாசல் அருகே மணி
விழுந்தானில் நேற்று நடந்தது. வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன் தலைமையில் குழுவினர்,
முதலுதவி பெட்டி, தீயணைப்பு
கருவிகள், வேக கட்டுப்பாட்டு கருவி உள்பட, 21 பாதுகாப்பு அம்சங்கள் முறையாக பராமரிக்கப்படுகிறதா என பார்வையிட்டனர்.
இதுகுறித்து தாமோதரன் கூறியதாவது: ஆத்துார், கெங்கவல்லி, தலைவாசல், பெத்தநாயக்கன்பாளையம் தாலுகாவில் உள்ள பள்ளிகளில், 672 வாகனங்களில், 401 வாகனங்களை ஆய்வுக்கு கொண்டு வந்தனர். இதில், 56 வாகனங்களில் அவசர கால கதவு பராமரிப்பின்மை, இருக்கை சேதம், முதலுதவி பெட்டியில் மருந்து இல்லாதது, தீயணைப்பு கருவி காலாவதி உள்ளிட்ட குறைகள் கண்டறியப்பட்டன. இதனால், 56 வாகனங்களும் தகுதி இழப்பு செய்து, 'நோட்டீஸ்' வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், 3 வாகனங்கள் தகுதி சான்று ரத்து செய்யப்பட்டுள்ளது. இவற்றை சரிசெய்து ஓரிரு நாளில் மறு ஆய்வுக்கு உட்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
சாலை விரிவாக்கத்திற்கு அகற்றிய நிழற்குடைகள் மீண்டும் அமைக்காததால் பயணியர் அவதி
-
ஆட்சீஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு
-
திருவொற்றியூரில் 200 பேர் ரத்ததானம்
-
மின் பெட்டிகள் சீரமைப்பு
-
உண்ணாவிரதம்; புறக்கணிப்பு; வெளிநடப்பு கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் ஆவேசம்
-
பெயர்ந்துள்ள சிமென்ட் தளம் நடைபயிற்சி செய்வோர் சிரமம்