ராமலிங்க சவுடேஸ்வரி கோவிலில் மார்பில் வாள் தாங்கும் நிகழ்ச்சி

திண்டிவனம்: திண்டிவனம் ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் மார்பில் வாள் தாங்கும் நிகழ்ச்சி நடந்தது.

திண்டிவனம் தேவாங்கர் வீதியில் உள்ள ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிேஷக விழா நேற்று முன்தினம் நடந்தது.

அதன் தொடர்ச்சியாக நேற்று காலை ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் சக்தி கலசம் புறப்பாடும், வீரபத்திர சுவாமி கோவிலில் இருந்து பண்டாரி சட்டியுடன் நகர் வலம் வந்தது.

விழாவில், சேலம் சின்னபேட்டை வீரகுமாரர்கள் தண்டக பதியம் பாடியபடி, தங்களுடைய மார்பில் வாள் தாங்கி சக்தியை அழைத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை திண்டிவனம் நகர தேவங்கர் குல சமூகத்தினர் செய்திருந்தனர்.

Advertisement