ஸ்ரீராம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 தேர்வில் நுாறு சதவீத தேர்ச்சி

செஞ்சி: நங்கிலிகொண்டான் ஸ்ரீராம் மெட்ரிக் மேல்நிலை பள்ளி மாணவர்கள், பிளஸ் 2 தேர்வில், நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
செஞ்சி அடுத்த நங்கிலிகொண்டானில் உள்ள ஸ்ரீராம் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில், பிளஸ் 2 தேர்வு எழுதிய 33 மாணவர்களும் தேர்ச்சி பெற்று, பள்ளிக்கு நுாறு சதவீத தேர்ச்சியை பெற்று தந்துள்ளனர்.
மாணவி விஜயலட்சுமி, மாணவர்கள் சத்தீஷ், சந்தோஷ் ஆகியோர், தலா 589 மதிப்பெண் பெற்று முதல் இடம் பிடித்தனர்.
மாணவன் மோகன்ராஜ் 584 மதிப்பெண் பெற்று இரண்டாமிடமும், மாணவி அனுசுயா 583 மதிப்பெண் எடுத்து மூன்றாமிடமும் பிடித்தனர். வேதியலில் 12 மாணவர்களும், உயிரியலில் 1 மாணவரும், கணிதத்தில் 5 மாணவர்களும், கணினி அறிவியலில் 7 மாணவர்களும் 100க்கு 100 மதிப்பெண் எடுத்து சாதனை படைத்தனர்.
முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களை பள்ளி நிறுவனர் ராமன், தாளாளர் சத்தியகீதா ராமன் ஆகியோர் சால்வை அணிவித்து பரிசு வழங்கி பாராட்டினர்.
மேலும்
-
ரோகித் சர்மா, கோலிக்கு மாற்று யார்: இந்திய அணி தேர்வாளர்களுக்கு சோதனை
-
இருக்கை வசதியில்லாத இ - சேவை மையம் மணிக்கணக்கில் காத்திருக்கும் பகுதிவாசிகள்
-
பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால்...: கடற்படை எச்சரிக்கை
-
தேடப்படும் காலிஸ்தான் பயங்கரவாதி பீஹாரில் கைது
-
பிரிமியர் தொடர் எப்போது: ஆமதாபாத்தில் பைனல்
-
கோப்பை வென்றது இந்தியா: பெண்கள் முத்தரப்பு ஒருநாள் தொடரில்