மேல்மலையனுாரில் தி.மு.க., பொதுக்கூட்டம்

அவலுார்பேட்டை: மேல்மலையனுாரில் தி.மு.க., சார்பில் அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.

கிழக்கு ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன் தலைமை தாங்கினார். தலைமை கழக பேச்சாளர் வண்ணை புகாரி, மஸ்தான் எம்,எல்.ஏ., அரசின் சாதனைகளை விளக்கி பேசினர்.

ஒன்றிய அவைத்தலைவர் மன்னஏழுமலை, முன்னாள் எம்.எல்.ஏ., செந்தமிழ்ச்செல்வன், ஒன்றிய சேர்மன் கண்மணி நெடுஞ்செழியன், ஜெய்சங்கர், பொதுக்குழு உறுப்பினர் செல்வராஜ், ஒன்றிய செயலாளர்கள் சாந்தி, நாராயணமூர்த்தி, தாகிரா அப்துல்வகாப், சம்பத், செல்வம், அர்ஷத், கிளை செயலர் கணேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement