செஸ்: வைஷாலி மீண்டும் 'டிரா'

கிராஸ்லோப்மிங்: 'கிராண்ட் ப்ரி' செஸ் தொடரின் 4வது சுற்றை இந்திய வீராங்கனை வைஷாலி 'டிரா' செய்தார்.
சர்வதேச செஸ் கூட்டமைப்பு சார்பில் பெண்களுக்கான 'கிராண்ட் ப்ரி' செஸ் தொடர், 6 கட்டமாக நடத்தப்படுகிறது. இதில் 'டாப்---2' இடம் பிடிப்பவர்கள், கேண்டிடேட்ஸ் தொடரில் (உலக கோப்பை தகுதி போட்டி) பங்கேற்கலாம். இதுவரை முடிந்த 5 கட்ட போட்டிகளின் முடிவில் ரஷ்யாவின் அலெக்சாண்ட்ரா (308.34 புள்ளி), இந்தியாவின் ஹம்பி (279.17) முதலிரண்டு இடத்தில் உள்ளனர்.
இதன் கடைசி, 6வது தொடர் ஆஸ்திரியாவில் நடக்கிறது. இந்தியா சார்பில் தமிழகத்தின் வைஷாலி பங்கேற்கிறார். இதன் 4வது சுற்றில் வைஷாலி, உக்ரைனின் மரியா முசிசுக் மோதினர். வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய வைஷாலி, 35வது நகர்த்தலில் 'டிரா' செய்தார்.
நான்கு சுற்றுகளின் முடிவில் வைஷாலி, 3.0 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளார். உக்ரைனின் அனா முசிசுக் (3.5 புள்ளி) முதலிடத்தில் உள்ளார்.
மேலும்
-
தேசிய பாதுகாப்பு நிதிக்கு இசை நிகழ்ச்சி கட்டணம்: இளையராஜா
-
இந்திய ராணுவத்துக்கு எப்போதும் துணை நிற்போம் கவர்னர் ரவி பெருமிதம்
-
போலி ஆதார் தயாரிப்பு 2 பேர் கைது
-
இந்திய ராணுவத்திற்காக பெண்கள் கோயிலில் வழிபாடு
-
கடல் வாழ் உயிரினங்களின் படைப்புகள் ரோஜா கண்காட்சியில் பார்வைக்கு விருந்து
-
உண்டியல் சேமிப்பு பணத்தை ராணுவத்துக்கு வழங்கிய சிறுமி