போலி ஆதார் தயாரிப்பு 2 பேர் கைது
கரூர்:கரூரில் போலி ஆதார், பான் கார்டு தயாரித்த புகாரில், நேபாளத்தைச் சேர்ந்தவர் உட்பட, இருவரை போலீசார் கைது செய்தனர்.
கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், போலி ஆதார் மற்றும் பான் கார்டு தயாரித்து வழங்குவதாக, கோவை மாவட்ட தீவிரவாத தடுப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, மே, 8ல் கோவை தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார், கரூரில், கார்த்திக், ஜெயக்குமார், சம்பத்குமார், நவீன், சீனிவாசன், கலைவாணி ஜெனிபர் ஆகிய, ஆறு பேரை பிடித்து, கரூர் டவுன் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இதையடுத்த விசாரணையில், போலியாக பான் கார்டு, ஆதார் கார்டு தயாரிக்க உடந்தையாக செயல்பட்டதாக, திருப்பூரில் வசிக்கும், நேபாள நாட்டைச் சேர்ந்த ராம் பகதுார், 35; மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த மிதுன் ஷேக், 29; ஆகிய இருவரை, கரூர் டவுன் போலீசார் கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement