பயங்கரவாதிகளை துரத்த வேண்டும்: விடக்கூடாது என்கிறார் ஒவைசி

5

ஐதராபாத்: போர் நிறுத்தம் இருந்தாலும் இல்லாவிட்டாலும், பஹல்காம் தாக்குதலுக்கு காரணமான பயங்கரவாதிகளை தண்டிக்க வேண்டும்
என்று ஏ.ஐ.எம்.ஐ.எம்., தலைவரும் ஐதராபாத் எம்.பி.,யுமான அசாதுதீன் ஓவைசி கூறியுள்ளார்.

இது குறித்து அசாதுதீன் ஓவைசி பதிவிட்டுள்ளதாவது:

இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடி போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட நிலையில், போர் நிறுத்தம் செய்தாலும் இல்லாவிட்டாலும், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னணியில் உள்ளவர்களை இந்தியா தொடர்ந்து துரத்த வேண்டும்.

போர் நிறுத்தத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். பிரதமர் மோடி அறிவித்திருக்க வேண்டும். அதைத்தான் நான் விரும்புகிறேன்.


போர் நிறுத்தம் செய்தாலும் இல்லாவிட்டாலும், பஹல்காம் தாக்குதலுக்கு காரணமான பயங்கரவாதிகளை நாம் துரத்த வேண்டும், பாகிஸ்தான் தனது பிரதேசத்தை இந்தியாவிற்கு எதிராக பயங்கரவாதத்திற்கு பயன்படுத்தும் வரை, நிரந்தர அமைதி இருக்க முடியாது.

இவ்வாறு ஒவைசி பதிவிட்டுள்ளார்.

Advertisement