பிளஸ் 2 தேர்வில் எஸ்.பி.கே., பள்ளி சாதனை

திருச்செங்கோடு, திருச்செங்கோடு எஸ்.பி.கே., மெட்ரிக் பள்ளி மாணவ, மாணவியர், பிளஸ் 2 பொதுத்தேர்வில், 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். இதில், உயிரியல் பிரிவு மாணவர் தினேஷ், 584 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடம்; கலைப்பிரிவு மாணவர் சவுமிதரன், 572 மதிப்பெண் பெற்று,

2ம் இடம்; உயிரியல் பிரிவு மாணவி ஜோவிகா, 569 மதிப்பெண் பெற்று, 3ம் இடம் பிடித்தனர். அதிக மதிப்பெண் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவ, மாணவியரை, தாளாளர் இன்ஜினியர் செங்கோடன், சேர்மன் பிரபு, முதல்வர், ஆசிரியர்கள் பாராட்டினர்.

Advertisement