பைக் திருடியவருக்கு போலீஸ் வலைவீச்சு


சேந்தமங்கலம்,சேந்தமங்கலம் டவுன் பஞ்., - தி.மு.க., நகர செயலாளராக இருப்பவர் தனபால், 50;

கடந்த, இரண்டு நாட்களுக்கு முன், தன் டூவீலரை சேந்தமங்கலம் கடை வீதியில் நிறுத்திவிட்டு வேலைக்காக சென்றார். சிறிது நேரம் கழித்து தனபால் வந்து பார்த்தபோது டூவீலரை காணவில்லை.


இதுகுறித்து தனபால் அளித்த புகார்படி, சேந்தமங்கலம் போலீசார், 'சிசிடிவி' கேமராவை ஆய்வு செய்து, பைக் திருடிய மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Advertisement