குகை வழிப்பாதை பணியால் பரளி ரயில்வே கேட் மூடல்

குளித்தலை, குளித்தலை அடுத்த ராஜேந்திரம் பஞ்., தண்ணீர்பள்ளி - பரளி நெடுஞ்சாலை, பரளி ரயில்வே கேட் பகுதியில் குகை வழிப்பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக, இந்த சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. மேலும், குகை வழிப்பாதை பணி மேற்கொள்ள வசதியாக, மின் இணைப்புகள் துண்டிக்கும் பணியில், குளித்தலை மின்வாரிய உதவி பொறியாளர் நடராஜன் தலைமையில் மின்வாரிய பணியாளர்கள் ஈடுபட்டனர்.

ரயில்வே கேட் மூடப்பட்டதால், 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாதிக்கப்பட்டனர். இதன் அருகே உள்ள மருதுார்-மேட்டுமருதுார் சாலையில், மருதுார் ரயில்வே குகை வழிப்பாதை பணி நிறைவு பெறாமல், பரளி ரயில்வே குகை வழிப்பாதை பணி தொடங்கப்பட்டுள்ளது. இதனால், 50க்கு மேற்பட்ட கிராம மக்கள் குளித்தலை மற்றும் பல்வேறு பகுதிக்கு செல்லுவதென்றால், 15 கிலோ மீட்டர் சுற்றிச்செல்ல வேண்டிய நிலை உள்ளது.

Advertisement