கேலோ இந்தியா பளு துாக்கும் போட்டி புதுச்சேரி மாணவிக்கு வெள்ளி பதக்கம்

புதுச்சேரி: பீகாரில் நடைபெற்று வரும் கேலோ இந்தியா விளையாட்டு திருவிழாவில் பளு துாக்கும் போட்டியில் புதுச்சேரி மாணவி வெள்ளி பதக்கம் பெற்று பெருமை சேர்த்துள்ளார்.
கேலோ இந்தியா இளைஞர்தேசியவிளையாட்டு விழா கடந்த 4ம் தேதி முதல் பீகார் மாநிலத்தில் நடைபெற்று வருகிறது.
18 வயதிற்கு உட்பட்ட பள்ளி மாணவர்களுக்கான இப்போட்டியில் புதுச்சேரி மாநிலம் சார்பில், மல்லர் கம்பம், செட்டக் சக்ரா, மல்யுத்தம், பளு துாக்குதல் மற்றும் கலரி பையட் ஆகிய போட்டிகளில் மொத்தம் 26 மாணவ, மாணவிகள் பங்கேற்றுள்ளனர். இதில், நேற்று நடந்த பளு துாக்கும் போட்டியில், 40 கிலோ எடை பிரிவில் ஒடிசாவை சேர்ந்த ஜாய்ஷனா சபர் 122 கிலோ எடையை துாக்கி தங்கம் வென்றார்.
புதுச்சேரியை சேர்ந்த தர்ஷிணிபிரியா 116 கிலோ எடைய துாக்கி வெள்ளி பதக்கம் வென்றார். தமிழ்நாட்டை சேர்ந்த ஐஸ்வரியா 115 கிலோ எடையை துாக்கி வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
மேலும்
-
பொன்முடி முன்னிலையில் எம்.எல்.ஏ., கொந்தளிப்பு; வெட்ட வெளிச்சம் ஆனது கோஷ்டிப்பூசல்
-
ஓய்வு பெற்ற நீதிபதியிடம் தகராறு; மத போதகர்கள் நால்வர் சஸ்பெண்ட்
-
வங்கதேசத்தில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா கட்சிக்கு தடை; பயங்கரவாத தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை!
-
வேன் கவிழ்ந்து 16 பேர் காயம்
-
இன்றைய நிகழ்ச்சி ராமநாதபுரம்
-
1008 திருவிளக்கு பூஜை