பா.ஜ., சார்பில் நீர் பந்தல் திறப்பு
நாமக்கல், கோடை காலத்தில், தமிழகம் முழுவதும் கடும் வெப்பம் நிலவி வருகிறது. இதையொட்டி, தமிழகம் முழுவதும் பா.ஜ., சார்பில், தண்ணீர் பந்தல் திறக்க வேண்டும் என, மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், 'மாநில பா.ஜ., சார்பில் தாகம் தீர்ப்போம்' என்ற இயக்கத்தை துவக்கி வைத்தார்.
இதையொட்டி, நாமக்கல் நகர பா.ஜ., சார்பில், பொதுமக்களுக்காக நீர்மோர் மற்றும் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழாவிற்கு, நகர
தலைவர் தினேஷ் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் சரவணன், நீர் மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு பழம், நீர்மோர் வழங்கினார். அப்போது, ''நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில், பெதுமக்கள் அதிகமாக கூடும் அனைத்து இடங்களிலும், உடனடியாக தண்ணீர் பந்தல் அமைக்கப்படும்'' என, தெரிவித்தார். மாவட்ட, நகர நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இந்தியா தாக்குதலில் முக்கிய பயங்கரவாதிகள் பலி: உறுதி செய்தது ராணுவம்
-
பாகிஸ்தானும் பயங்கரவாதமும்... ஆதாரத்துடன் ஐ.நா.,வை நாடும் இந்தியா!
-
நேபாளத்திற்கு 15 மின்சார வாகனம்; பரிசளித்தது இந்தியா
-
டில்லியில் இன்றும் 100 விமானங்கள் ரத்து
-
இந்தியா, பாகிஸ்தான் போர் நிறுத்தம் மகிழ்ச்சி அளிக்கிறது: புதிய போப் முதல் உரை!
-
கேரளாவில் கார், டெம்போ மோதி கோர விபத்து: காரில் வந்த 4 பேர் உடல்நசுங்கி பலி
Advertisement
Advertisement