சிறப்பு குறை தீர்நாள் முகாம்

விழுப்புரம்: உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில், பொது விநியோக திட்ட சிறப்பு குறை தீர்நாள் முகாம் நடந்தது.

விழுப்புரம் குடிமை பொருள் வழங்கல் பிரிவு தாசில்தார் ஆனந்தன் தலைமை தாங்கி, பொது மக்களிடம் மனுக்களை பெற்றார். வருவாய் ஆய்வாளர் லட்சுமிநாராயணன், அலுவலர் நவீன்குமார் முன்னிலை வகித்தனர். முகாமில், ஸ்மார்ட் ரேஷன் கார்டில் திருத்தம், குடிமைப்பொருள் வழங்கலில் உள்ள குறைபாடுகள், ரேஷன் விநியோகத்தில் கோரிக்கைகள் குறித்த மனுக்கள் பெறப்பட்டு, நடவடிக்கை எடுக்க அலுவலர்கள் உத்தரவிடப்பட்டது.

இதேபோல், அனைத்து தாலுகாவிலும் சிறப்பு குறைதீர்நாள் முகாம் நடந்தது.

Advertisement