முத்துமாரியம்மன் கோவிலில் தேர் திருவிழா

செஞ்சி: திருவம்பட்டு முத்து மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவில் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்தனர்.

செஞ்சி அடுத்த திருவம்பட்டு முத்துமாரியம்மன் கோவிலில் தேர் திருவிழா கடந்த 1ம் தேதி காப்பு கட்டி, கொடியேற்றத்துடன் துவங்கியது.

அன்று மதியம் சாகை வார்த்தலும், 3ம் தேதி திரவுபதியம்மனுக்கு திருக்கல்யாணமும், 8 தேதி தீமிதி விழா, திருக்கால்யாணமும் நடந்தது. தினமும் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி வீதி உலா நடந்து வந்தது.

9ம் நாள் விழாவாக திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடந்தது. சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு வடம் பிடித்தனர்.

Advertisement