தி.மு.க., அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில், தி.மு.க. அரசின் நான்காண்டு கால சாதனை பொதுக்கூட்டங்கள், காவேரிப்பட்-டணம் கிழக்கு ஒன்றியம் பண்ணந்துார் பஞ்., மத்துார் தெற்கு ஒன்றியம் ஆனந்துார் பஞ்., போச்சம்பள்ளி ஒன்றியம் அரசம்-பட்டி பஞ்., ஆகிய இடங்களில் நடந்தது.

'
நாடு போற்றும் நான்காண்டு, தொடரட்டும் பல்லாண்டு' என்ற தலைப்பில் நடந்த பொதுக்கூட்டங்களுக்கு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட, தி.மு.க., செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., தலைமை வகித்து பேசியதாவது:- தி.மு.க. அரசின் நான்கு ஆண்டு கால ஆட்சியில், மகளிர் உரிமை தொகை திட்டம், மகளிருக்கான விடியல் பயண திட்டம், மாணவ, மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டம், தமிழ்ப்பு-தல்வன் திட்டம், மக்களை தேடி மருத்துவம் என ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
அரசின் திட்டங்கள் குறித்து மக்களிடம் எடுத்து கூற வேண்டும். 2026 சட்டசபை தேர்தலிலும், தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெற கட்சியினர் பணியாற்றிட வேண்டும். இவ்வாறு பேசினார்.
தலைமை பேச்சாளர்கள் சேர்க்காடு கென்னடி, தர்மபுரி அதி-யமான், மாவட்ட அவைத்தலைவர் தட்ரஹள்ளி நாகராஜ், மாநில வர்த்தக அணி துணை செயலாளர் சீனிவாசன் மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர்.

Advertisement