அழுகிய நிலையில் சடலம் மீட்பு
தளி: அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் சந்தீப்லால், 35. சூளகிரி அருகே எலசமாக்கனப்பள்ளியில் தங்கி, கூலி வேலை செய்து வந்தார். கடந்த, 6 ம் தேதி மாலை, 6:00 மணிக்கு தளிக்கு சென்று விட்டு, ஹீரோ ஹோண்டா ஸ்பிளண்டர் பைக்கில் மீண்டும் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார்.
தளி - ஓசூர் சாலையில், உப்பனுார் ஏரிக்கரை அருகே வந்த போது, சாலையோர மரத்தில் பைக் மோதியது. இதில் நிலைதடு-மாறி பைக்கில் இருந்து தவறி, அங்கு சாலையோரம் இருந்த, 15 அடி பள்ளத்தில் சந்தீப்லால் விழுந்து உயிரிழந்தார். அவர் வீட்-டிற்கு திரும்பாததால், அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் தேடி வந்தனர்.இந்நிலையில், உப்பனுார் ஏரிக்கரை பகுதியில் கடும் துர்நாற்றம் வீசியதால், அப்பகுதி மக்கள் சென்று பார்த்த போது, அழுகிய நிலையில் ஆண் சடலம் கிடந்தது. தளி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சடலத்தை மீட்டு விசாரித்த போது, சந்தீப்லால் விபத்தில் சிக்கி உயிரிழந்தது தெரிந்தது. போலீசார்
வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.