மொரப்பூர், தர்மபுரி அகல ரயில் பாதைக்கு நில எடுப்பு பணி குறித்து கலெக்டர் ஆய்வு
தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் வட்டத்திற்குட்பட்ட போளையம்பள்ளி, செட்டிக்கரை பஞ்., மற்றும் ராஜாப்பேட்டை வழியாக, மொரப்பூர் - தர்மபுரி புதிய அகல ரயில் பாதை அமையவுள்ளது.
இத்திட்டத்திற்கான, நில எடுப்பு பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் நேற்று ஆய்வு செய்த பின் கூறியதாவது:
மொரப்பூர் - தர்மபுரி புதிய அகல ரயில் பாதை திட்டத்தில், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் தர்மபுரி ஆகிய மூன்று வட்-டங்களில், 18 கிராமங்களில், 194 ஏக்கர் பட்டா நிலங்கள், 33 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலங்கள் எடுக்கப்படவுள்ளன.
இதில், 194 ஏக்கர் பட்டா நிலங்களில், 134 ஏக்கர் நிலங்களுக்கு நில எடுப்பு சட்டப்படி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மீத-முள்ள, 60 ஏக்கரில், மூக்கனுார், செட்டிக்கரை, அளேதருமபுரி, ஏ.ரெட்டிஅள்ளி கிராம மக்களின் நலன் கருதி மாற்றுப்பாதை அமைக்க திட்ட அட்டவணை தயாரிக்கும் பணி நடக்கிறது.
அதேபோல அரசு புறம்போக்கு நிலங்களில், 18 ஏக்கர் நிலங்கள் கையகப் படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மீத-முள்ள, 15 ஏக்கர் நிலங்கள் மாற்றுப்பாதை அடிப்படையில் செல்லும் வகையில், மொரப்பூர் - தர்மபுரி திட்டம் செயல்படுத்-தப்படும்.
இவ்வாறு கூறினார்.
டி.ஆர்.ஓ., கவிதா, அரூர் வருவாய் கோட்டாட்சியர் சின்னுசாமி, தாசில்தார்கள் சண்முகசுந்தரம், கலைச்செல்வி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.
மேலும்
-
முதுமலை யானைகள் முகாமில் விழா; ரூ.13 கோடி திட்டங்களை துவக்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்!
-
தூய்மைப் பணியாளர்களுக்கான திட்டத்தில் முறைகேடு: சி.பி.ஐ., விசாரணை கோரி சவுக்கு சங்கர் வழக்கு
-
பாகிஸ்தானை ஆதரித்த துருக்கி, அஜர்பைஜானை புறக்கணிக்க வேண்டும்; இணையத்தில் டிரெண்டிங்
-
அரசு நிதியில் ரூ.80 லட்சம் மோசடி: ஒடிசாவில் 5 வனத்துறை அதிகாரிகள் கைது
-
ஆபரேஷன் சிந்துார் வெற்றி; அறுபடை வீடுகளில் ஆந்திரா மாநில எம்.எல்.ஏ.,க்கள் சிறப்பு வழிபாடு
-
அசாம் பஞ்சாயத்து தேர்தலில் வரலாற்று வெற்றி: மத்திய அமைச்சர் அமித் ஷா பெருமிதம்