அரூர் இ.ஆர்.கே., பள்ளி பிளஸ் 2 தேர்வில் சாதனை

அரூர், தர்மபுரி மாவட்டம், அரூர் அருகே, சேலம் சாலை எருமியாம்பட்டியில் இ.ஆர்.கே., மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில், 2024-25ம் கல்வியாண்டில் பிளஸ் 2 படித்த மாணவி லோகேஸ்வரி, 600க்கு, 586 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்தார். இதேபோல், மாணவர்கள் மெகஸ்தனிஷ், 600க்கு, 584 மதிப்பெண் பெற்று, 2ம் இடம்; தனுஷ், 600க்கு, 582 மதிப்பெண் பெற்று, 3ம் இடம் பிடித்து சாதனை படைத்தனர்.

வேதியியல் பாடத்தில், 8 பேர், கணிதவியலில், 2 பேர், 100க்கு, 100 மதிப்பெண்ணும்; தமிழ், 2 பேர், இயற்பியல், 3 பேர், உயிரியல், 3 பேர், கணினி பயன்பாடு, 1 என, ஒன்பது பேர், 100க்கு, 99 மதிப்பெண் பெற்றனர். 580க்கும் மேல், 5 பேர், 560க்கு மேல், 16 பேர், 500க்கு மேல், 49 பேர், 450க்கு மேல், 89 பேர் மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர். அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை, இ.ஆர்.கே., கல்வி நிறுவனங்களின் தாளாளர் செல்வராஜ், நிர்வாக இயக்குனர் சோழவேந்தன், தலைமை ஆசிரியர் தீர்த்துமலை, நிர்வாக அலுவலர் அருள்குமார் ஆகியோர் பாராட்டி பரிசு வழங்கினர்.

Advertisement