குரு பெயர்ச்சியையொட்டி சிறப்பு பூஜை

ப.வேலுார்: ப.வேலுார் சக்தி நகரில் உள்ள விநாயகர் கோவிலில், குரு பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. காலை, 11:00 மணிக்கு உலக நன்மை வேண்டி யாகம் நடத்தப்பட்டது.

பின், 18 வகை வாசனை திரவியங்களுடன் குரு பகவானுக்கு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மதியம் தீபாராதனை காட்டப்பட்டது. ப.வேலுார் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்துகொண்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், பக்தர்கள் செய்திருந்தனர்.

Advertisement